சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கேட்டு பெண்ணிடம் துன்புறுத்தல்: 9 பேர் மீது வழக்கு 

Added : நவ 29, 2019
Advertisement

ராமநாதபுரம்: கணவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், இரண்டாம் திருமணம் செய்ததாகவும்பெண் புகாரில் கணவர், இரண்டாவது மனைவி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.

முதுகுளத்துார் அருகே பச்சேரியை சேர்ந்தவர் உதயக்குமார் 35. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளவரசி 30, என்பவருக்கும் 2013 ல் திருமணம் நடந்தது. உதயக்குமார் சென்னையில் கார் டிரைவராக பணி புரிகிறார். இளவரசியிடம் 30 பவுன் நகையும், ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு துன்புறுத்தியுள்ளார். இரண்டாம் திருமணம்செய்து உறவினர்களுடன் சேர்ந்து இளவரசியை கொடுமைப்படுத்தியாக இளவரசி கீழக்கரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.இதன் பேரில் கணவர் உதயக்குமார், இரண்டாவது மனைவி அகிலா, மாமனார் ராமநாதன், அவரது உறவினர்கள் தெய்வக்கனி, தமிழ்செல்வி, ராஜலட்சுமி, சடையாண்டி, தேவேந்திரகுமார், கவிதா, சேகர், பத்மா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X