பொது செய்தி

தமிழ்நாடு

மூக்கையூர் துறைமுகத்தில் கற்கள்

Added : நவ 29, 2019
Advertisement

ராமநாதபுரம்: இலங்கை அரசு படகுகளை பறிமுதல் செய்தும், வலைகளை சேதப்படுத்தி, மீனவர்களை கைது செய்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக மூக்கையூர் மீன் பிடி துறைமுகத்தை மத்திய மாநில அரசுகள் 113.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்துள்ளது.

இங்கு 250 விசைப்படகுகளும்,200 நாட்டுப்படகுகளும் நிறுத்தலாம். ஆழ் கடல் மீன் பிடிப்பில் உள்ள நவீன படகுகளையும்இங்கு நிறுத்த முடியும். துறைமுக வாயிலில் 3 மீட்டர் ஆழம் இருக்க வேண்டும். ஒரு மீட்டர் ஆழத்தில் பாறைகள் உள்ளது. இதனைஅப்புறப்படுத்தினால் மட்டுமே துறைமுகத்தை பயன்படுத்த முடியும். முதல்வர் திறந்து வைத்து ஓராண்டிற்கு மேல் ஆகிறது.இதுவரை பயன்பாட்டில் இல்லாத நிலையில் உள்ளது. இத்திட்டத்தின் சேமிப்பு நிதியில் இருந்து 1.50 கோடி மதிப்பீட்டில் பாறைகளை அப்புறப்படுத்தி 3 மீட்டர் ஆழப்படுத்த நவீன கருவிகள் துறைமுகத்திற்கு வந்துள்ளது. இதற்கான பணிகள் நாளை(நவ.30 ) துவங்க உள்ளது. விரைவில் துறைமுகம் பயன்பாட்டிற்கு வரும் என மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X