விருதுநகர்: பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்களின் கரியமில வாயு வெளியேற்றம் நாட்டிற்கு பெரிய பிரச்னையாக உள்ளது.
அதனால் நாடெங்கும் உள்ள இருசக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, மின்சார வாகனங்களை தயாரிக்க முன்னுரிமை தர வேண்டும் எனமத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.இந்தியாவில் 17 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ள நிலையில் ஒரு வாகனத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 200 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. இதனால் இந்தியாவில் ஆண்டுக்கு 3,400 கோடி லிட்டர் பெட்ரோல் தேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களை மின்சாரத்திற்கு மாற்றினால் ஆண்டுக்கு 1.2 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகவும் . இதை கொண்டு வந்தால் அடுத்த 7 ஆண்டுக்குள் 100 சதவீதம் மின்சார வாகனங்களாக மாற்ற முடியும் என நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவித்துள்ளது.அதன்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காற்று மாசுபடுவதை குறைக்கவும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக மின்சார வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்ய வசதியாக 'தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை - 2019' தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கொள்கையின்படி இரு சக்கர வாகனங்களுக்கு 2022 வரை 100 சதவீதம் சாலை வரி விலக்கு அளிக்கப்படும். பதிவு கட்டணம் விலக்கி கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கேற்ப விருதுநகரில் மின்சார ஸ்கூட்டர் விற்பனை மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.பொருளாதாரத்தில் பாதிப்பு இல்லைவீட்டில் உணவு தயாரித்து வீடுகளுக்கு, அலுவலகங்களுக்கு டோர் டெலிவரி செய்து வருகிறேன். கடந்த ஓராண்டாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்தி வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பெட்ரோல் போடும் செலவு அறவே இல்லை. சில மணிநேரங்கள் சார்ஜ் செய்து நாள் முழுவதும் டெலிவரி பணியில் உள்ளேன். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லை. பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பு இல்லை. வேகமாக செல்லாமல் மிதமான வேகத்தில் செல்வதால் விபத்து ஆபத்தும் இல்லை. நிறைவான பணிக்கு குறைவான செலவில் செல்ல ஏற்றது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான்.-- ராஜசேகர், அனிதா மெஸ், விருதுநகர்பெண்கள் ஓட்டுவது எளிதுஇந்திய வாகன சந்தையில் மின்சார ஆற்றல் பெற்ற பல்வேறு வாகனங்களை களமிறக்கி வருகிறது ஒகினவா மற்றும் பென்லிங் நிறுவனங்கள். இந்நிறுவன எல்க்டரிக் ஸ்கூட்டர் கையாள்வதற்கு எளிதாகவும், பயன்படுத்துவதற்கு இலகுவாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. நகர் மற்றும் கிராமப்புறங்களில் தினசரி தேவைகளுக்காக இந்த ஸ்கூட்டரை தாராளமாக பயன்படுத்தலாம். பெண்கள் இந்த ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும்.-- ராமமூர்த்தி, ராஜா எலக்ட்ரிக் பைக்ஸ், விருதுநகர்சுற்றுச்சூழல் மாசு குறையும்வாகனங்களின் கரியமில வாயு வெளியேற்றமும் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாடு ஏற்பட முக்கிய காரணியாக உள்ளது. நாட்டின் சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட இன்றைய இளைஞர்கள் முக்கியமாக இளம் பெண்கள் மாசு படுத்தாத மின்சார வாகனங்களை வாங்க விரும்புவார்கள். 2023-24 க்குள் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் மின்சார வாகன உற்பத்திக்கு மாறி விடுவார்கள். அதன்பின் மின்சார இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சுற்றுச்சூழல் மாசுபாடு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.--- கண்ணன், தனியார் ஊழியர், விருதுநகர்வாடிக்கையாளர்களை கவரும்இந்த ஸ்கூட்டரில் எல்.இ.டி., திறனில் ஒளிரும் முகப்பு மற்றும் பின் விளக்குகள்,எல்.இ.டி., ஸ்பீடோ மீட்டர், புஷ் பட்டன் செல்ப் ஸ்டார்ட் போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. முழுமையாக சார்ஜ் செய்தால் 50 முதல் 120 கி.மீ., வரை செல்லும். ஸ்கூட்டரின் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரங்கள் ஆகும். கலையுணர்வும், தொழில்நுட்பம் கலந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும். கடந்த ஓராண்டுக்குள் 160 க்கு ் மேற்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளது.-- கார்மேகம், விற்பனையாளர், விருதுநகர்