பொது செய்தி

தமிழ்நாடு

உரிமம் பெறாத கடைகளில் விதைகளை வாங்காதீங்க

Added : நவ 29, 2019
Advertisement

விவசாயத்தில் விதை ஆய்வு, சான்றளிப்பு துறையின் பங்குநல்ல முளைப்பு திறன், தரமான சான்றளிக்கப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் கொண்டு போய் சேர்ப்பது எங்கள் பணி. தரமான விதைகளாலே சாகுபடி அதிகரிக்கும். விவசாயம் மேம்படுவதில் நாங்களும் முக்கிய பங்கு வகிக்கிறோம்.விதை வாங்கும் போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை...?பயிர் ரகம், குவியல் எண், சோதனை நாள், காலாவதி நாள், இனத்துாய்மை, புறத்துாய்மை ஆகியவற்றை பார்க்க வேண்டும். காலாவதி நாள் குறைவாக, உதாரணமாக 1 மாதத்தில் காலாவதியாக உள்ள விதைகளை வாங்க வேண்டாம். காரணம் அவற்றின் முளைப்பு திறன் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.அட்டை முறை என்றால் என்ன...?கருவிதைக்கு மஞ்சள் அட்டை, ஆதார விதைக்கு வெள்ளை அட்டை, சான்று அளிக்கப்பட்ட விதைக்கு ஒபெல் பச்சை அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டைகள் முறையாக வழங்கப்பட்ட பின் தான் விவசாயிகளுக்கு விதைகள் சென்றடைகின்றன.விதை விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்...?விதை விற்பனையாளர்கள் உரிமத்தை விவசாயிகள் பார்வையில் படும் படி கடையில் வைக்க வேண்டும். உரத்தையும், விதையையும் அருகருகே வைத்து விற்பனை செய்ய கூடாது. உரமும் விதையின் முளைப்பு திறனை பாதிக்க கூடும். மேலும் விதை ஆய்வாளரின் சோதனையின் போது இன்வாய்ஸ், சேமிப்பு கிடங்கு உள்ளிட்டவற்றை முறையாக பராமரித்திட வேண்டும்.விதை ஆய்வாளர்களின் பணி...?விதை விற்பனை நிலையங்களுக்கு சென்று விதை மாதிரிகளை எடுத்து வந்து சோதனைக்கு அனுப்பி அறிக்கை அனுப்புவர். அறிக்கையில் வரும் முடிவுகளை பொறுத்தே நடவடிக்கைகளை மேற்கொள்வர்.நமது மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை...?அரசு விதை விற்பனை நிலையங்கள் 39, கூட்டுறவு சங்கங்களின் விற்பனை நிலையங்கள் 115, தனியார் விற்பனை நிலையங்கள் 198 என 352 விதை விற்பனை நிலையங்கள் உள்ளது.தரமற்ற விதை விற்றவர்கள் மீது நடவடிக்கை ... ?2018-19 நிலவர படி 21 மெட்ரிக் டன் எடையுள்ள 29 தரமற்ற விதைகள் கண்டறியப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.40.67 லட்சம் . 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.விதை உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்விதை உரிமம் தற்போது இணைய வழி நடைமுறை ஆக்கப்பட்டு விட்டது. tnagris.net.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். உரிமம் பெறாமல் விற்பனை செய்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.விதை உரிமம் ஏன் கட்டாயம்உரிமம் பெற்ற கடைகளில் டன் கணக்கில் விதைகளை வாங்கும் உரிமம் பெறாதவர்கள் அதை கிராமப்புறங்களில் விற்பனை செய்வர். இவர்களால் இருப்பு வைத்து விற்பனை செய்யும் போது விதைகளில் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால்தான் உரிமம் பெற்ற கடைகளில்தான் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டும்.விதைகளின் முளைப்பு திறன் சதவீதம் என்ன...?மக்காசோளம் 90 சதவீதம், நெல் 80, பயிர் வகைகள் 75, சூரியகாந்தி, தக்காளி 70, பருத்தி 65 சதவீதமாக முளைப்பு திறன் உள்ளது.விவசாயிகளுக்கு கூறும் அறிவுரை...?விவசாயிகளுக்கு நுாறு சதவீதம் விழிப்புணர்வு வந்துவிட்டது. இருப்பினும் ஒரு சிலர் ஏமாறுகின்றனர். அனைவரிடமும் விழிப்புணர்வு சென்றுவிட்டது. இனியும் ஏமாறாமல் தரமான விதைகளை மட்டும் வாங்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X