பொது செய்தி

தமிழ்நாடு

இதற்கு ஓர் வழி காணுங்க

Added : நவ 29, 2019
Advertisement

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகங்களில் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களுக்கு கொடுக்கப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை இல்லாததால் அதற்கான முறையான அறிவிப்பினை நகராட்சி அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.நகராட்சி அலுவலகங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், குடிநீர் இணைப்பு, சொத்து வரி செலுத்துதல், வீடு, தொழிற்சாலை கட்டுவதற்கு 'பிளானிங் அப்ரூவல்' தொழிற்சாலை உரிமம், சொத்து வரி மதிப்பு, குடிநீர் பழுது பார்த்தல், புதிய காலிமனை தீர்வை, லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பொது மக்கள் வருகின்றனர். ஒவ்வொரு மனுக்களுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்கின்றனர். அதிகாரிகளுக்கு 'சம்திங்' கொடுக்கப்படும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கென புரோக்கர்களும் செயல்படுகின்றனர். 'சம்திங்' வழங்காவிடில் எவ்வளவு நாட்கள் ஆனாலும் மனுக்கள் கிடப்பிலே உள்ளது. புதிய குடிநீர் இணைப்பு, பிளானிங் அப்ரூவல், சொத்து வரி மதிப்பு, புதிய காலிமனை தீர்வை, ரன்னிங் லைசன்ஸ் உள்ளிட்டவைகளுக்கு ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக 2 லிருந்து 3 மாதம் வரை ஆகிறது. ஆனால் இதே மனுக்களுக்கு அரசு கட்டணத்தை தவிர்த்து கூடுதலாக பணம் கொடுக்கும் பட்சத்தில் நிர்ணயிக்கப்பட்ட நாட்களை விட குறைவான நாட்களுக்குள் வேலை முடிகிறது. பணம் கொடுக்காதவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது.ஆரம்ப காலங்களில் கொடுக்கும் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் நாட்களை அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் மக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். தற்போது பெரும்பாலான அலுவலகங்களில் அறிவிப்பு பலகை இல்லை. இதனால் மக்களுக்கும் எந்தந்த மனுவிற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என தெரியவில்லை.இதை தவிர்க்க முறையான அறிவிப்பினை பொது மக்கள் பார்வைக்கு வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சி அலுவலகங்களில் எந்தந்த மனுக்களுக்கு எத்தனை நாட்கள் என அறிவிப்பு பலகை வைத்திருந்தனர். தற்போது அது இல்லாமல் மக்களுக்கு எதுவுமே தெரியவில்லை. 'கவனித்தால்' மட்டுமே விரைவில் வேலை முடியும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்குள் மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்தால் மக்கள் தேவையில்லாமல் அலைவது தவிர்க்கப்படும்.- கார்த்திக்போஸ், தலைவர், ஜே.சி.ஐ.,நிலா, சிவகாசி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X