வாசகர் 'வாய்ஸ்'

Added : நவ 29, 2019
Advertisement

தொட்டியை உடைத்த தனி நபர்கள்வெம்பக்கோட்டை ஒன்றியம் டி.கரிசல்குளம் ஊராட்சியில் மினிபவர் பம்ப் குடிநீர் தொட்டியை தனிநபர்கள் ஆக்கிரமித்து உடைத்துள்ளனர். அருகே பந்தல் அமைத்துள்ளனர். வி.ஏ.ஓ.,விடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலீசாரும் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். குடிநீருக்காக பக்கத்து தெருக்களுக்கு சென்று வர வேண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகம் குடிநீர் தொட்டியை உடைத்து ஆக்கிரமித்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.- குருசாமி, டி.கரிசல்குளம்.

அங்கன்வாடி முன் கழிவுநீர்விருதுநகர் ஒன்றியம் ஆமத்துார் ஊராட்சி குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் அங்கன்வாடி ஒன்று உள்ளது. இதற்கு முன் குளியல் தொட்டி உள்ளதால் அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்கன்வாடி முன் தேங்குகிறது. இதனால் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் பகலிலே கொசுத்தொல்லை போன்ற பாதிப்புகளை சந்திக்கின்றனர். குளியல் தொட்டி அருகே கண்மாய் கரை ஒன்று உள்ளது. நீரை வீணாக்காமல் முறையாக கண்மாய் கரை வழியாக வெளியேற்றலாம். இதை செய்ய ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.- சதீஷ், குருமூர்த்திநாயக்கன்பட்டி.

தடுப்பணையில் கருவேலமரங்கள்விருதுநகர் ஒன்றியம் வடமலைக்குறிச்சி கண்மாய் செல்லும் வரத்துகால்வாயின் தடுப்பணையில் கருவேல ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. வடமலைக்குறிச்சியின் பெரிய கண்மாயின் வரத்து கால்வாயின் தடுப்பணையை பலப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பொன்ராஜ், வடமலைக்குறிச்சி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X