வாசகர் வாய்ஸ்...

Added : நவ 29, 2019
Advertisement

காற்றால் ரோட்டில் விழுகிறது சிவகாசி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை லாரியில் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படுகிறது. வழியில் காற்றில் அடிக்கப்பட்டு ரோட்டில் விழுகிறது. கடந்து செல்லும் வாகனங்கள் மீது கழிவுகள் விழுகிறது. விபத்து அபாயமும் ஏற்படுகிறது. வலையிட்டு மூடி எடுத்து செல்ல வேண்டும் .-- தயானந்தன்,சிவகாசி.

ரோசல்பட்டியில் சேதமடைந்த துாண்கள்விருதுநகர் ரோசல்பட்டி கே.கே.எஸ்.எஸ்.என்., நகரில் மேல்நிலை குடிநீர் தொட்டியின் துாண்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால் தொட்டி இடிந்து விழ வாய்ப்புள்ளது. ஊராட்சி நிர்வாகம் தொட்டி துாண்களை பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முத்துவேல், ரோசல்பட்டி.



ஆனைக்குட்டம் வைப்பாற்றை துார்வாரலாமேசிவகாசி ஆனைக்குட்டம் அருகே உள்ள வைப்பாற்றில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. தேவையற்ற புற்கள் வளர்ந்து நீர்வழித்தடத்தை சேதமாக்குகிறது. வைப்பாற்றை துார்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுதர்சன், ஆனைக்குட்டம்.



மல்லாங்கிணரில் பட்டுப்போன மரம்மல்லாங்கிணர் ரோட்டோரம் மரம் பட்டு போனது. எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து விபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறை பட்டுபோன மரத்தை அகற்ற முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுப்பிரமணியன், விருதுநகர்.



குமாரலிங்கபுரத்தில் மண்மேவிய தடுப்பணைவிருதுநகர் அருகே பி.குமாரலிங்கபுரத்தில் கண்மாய் தடுப்பணையில் மண்மேவி உள்ளது. இதனால் நீரை தேக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது. தடுப்பணையை ஆழப்படுத்த பொதுப்பணித்துறை முன்வர வேண்டும்- முத்துக்குமார், பி.குமாரலிங்கபுரம்.



மல்லாங்கிணரில் இப்பவோ அப்பவோஅருப்புக்கோட்டை மல்லாங்கிணர் அருகே பயணிகள் நிழற்குடை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்தை சந்திக்கின்றனர். 'இப்பவோ அப்பவோ' விழுந்துவிடும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.- முருகன், மல்லாங்கிணர்.



கே.கே.எஸ்.எஸ்.என்., நகரில் விபத்து வாய்ப்புவிருதுநகர் ரோசல்பட்டி கே.கே.எஸ்.எஸ்.என்., நகரில் மெழுகுவர்த்தி கம்பெனிக்கார தெருவின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இரவில் வருவோர் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. மின்கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் நட ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.- மாரீஸ்வரன், கே.கே.எஸ்.எஸ்.என்., நகர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X