பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.18.77 லட்சம் நல உதவிகள்

Added : நவ 29, 2019
Advertisement

விருதுநகர: வத்திராயிருப்பில் எஸ்.கொடிக்குளம் வருவாய் கிராமம் கிழவன் கோவிலில் கலெக்டர் கண்ணன் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., சந்திரபிரபா முன்னிலை வகித்தார்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவி தொகை, விதவை உதவி தொகை, ஊனமுற்றோர் உதவி தொகை, வேளாண்துறை நலத்திட்ட உதவிகள், கடனுதவிகள் என 157 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 77 ஆயிரத்து 588 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கூமாப்பட்டி அரசு மேல்நிலை பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிகளுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்.எல்.ஏ., சந்திரபிரபா திறந்து வைத்தார். டி.ஆர்.ஓ., உதயக்குமார், சப் கலெக்டர் தினேஷ்குமார், திட்ட இயக்குனர்கள் சுரேஷ், தெய்வேந்திரன், சமுக நல அலுவலர் ராஜம், நேர்முக உதவியாளர் சங்கர் எஸ்.நாராயணன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X