பொது செய்தி

தமிழ்நாடு

லாபம் பார்ப்பதோ இடைத்தரகர்கள் நஷ்டத்தை சந்திப்பது விவசாயிகள்

Added : நவ 29, 2019
Advertisement

விருதுநகர்: ரசாயன உர விவசாய பொருட்களால் ஏற்பட்ட பாதிப்பால் இயற்கை விவசாய பொருட்களின் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.இதில் உற்பத்தி செய்யும் விவசாயிகளை விட, வாங்கி விற்கும் இடை தரகர்களும், மொத்த வியாபாரிகளும் தான் அதிக லாபம் பார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ரசாயன உரங்களின் பயன்பாட்டு முறையால் விவசாய பொருட்களினால் பல்வேறு நோய்கள் வந்தவண்ணம் உள்ளது. இதனால் இயற்கை உணவு பொருட்களின் மீது மக்களுக்கு ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. நகரம் மட்டுமன்றி கிராமங்களில் அடித்தட்டு மக்கள் முதல் வசதிப்படைத்தவர்கள் வரை இயற்கை உணவு பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.இயற்கை உணவு பொருட்களான குதிரைவாலி, சாமை, கேழ்வரகு, திணை போன்ற சிறு தானியங்கள் விருதுநகரில் அதிகயளவில் பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் இதை விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு இடை தரகர்களால் வாங்கப்பட்டு சூப்பர் மார்க்கெட் போன்ற மொத்த வியாபாரிகள் மூலம் பொதுமக்களுக்கு அதிக விலையில் விற்கப்படுகிறது. இதில் அதிக லாபம் இடைதரகர்கள், வியாபாரிகளுக்கு செல்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X