வருஷநாடு: கடமலை-- மயிலை ஒன்றியத்தில் செங்கலுக்கு உரிய விலை கிடைக்காததால் செங்கல் சூளை தொழில் நலிவடைந்து வருகிறது.
கடமலைக்குண்டு, தங்கம்மாள்புரம், கோவில்பாறை, குமணந்தொழு, தும்மக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் செங்கல்கள் திருச்சி, நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் மொத்தமாக விற்பனை செய்து வந்தனர். இங்கு தினமும் இரண்டாயித்திற்கும் மேற்பட்டோர் இங்கு கூலி வேலை செய்கின்றனர். கரம்பை மண், டீசல் விலை உயர்ந்தும் செங்கலுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. ஒரு செங்கல் உற்பத்தி செய்ய ரூ. 8 வரை செலவாகிறது. ஆனால் தற்போது மார்க்கெட்டில் ரூ. 4க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் சூளை நடத்துவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். பலர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வெளி மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.