அலைபேசி பழுது பார்த்தல்பயிற்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அலைபேசி பழுது பார்த்தல்பயிற்சி

Added : நவ 29, 2019
Share

தேனி: தேனி தாலுகா அலுவலகம் எதிரில் கனரா வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் இயங்குகிறது. இங்கு அலைபேசி பழுது பார்த்தல் பயிற்சி டிச., 11 முதல் துவங்க உள்ளது. 18 வயது நிரம்பிய வேலை இல்லாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி மற்றும் காலை, மதிய உணவு இலவசம். தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை 30 நாட்கள் இலவச பயிற்சி நடைபெறும். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்குவதற்கான வங்கிக் கடன் ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர், தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றோடு டிச., 11க்கு முன் நேரில் வந்து முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 94427 58363 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என, பயிற்சி மைய இயக்குனர் மோகன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X