சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூடலுாரில் தொடரும் மணல் திருட்டு

Added : நவ 29, 2019
Advertisement

கூடலுார்: கூடலுாரில் மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து நடந்து வருகிறது.

கூடலுாரில் உள்ள முல்லைப்பெரியாறு, 18 ம் கால்வாய், நீர்வரத்து ஓடைகள்மற்றும் தனியார் விளைநிலங்களில் மணல் திருடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இரவு நேரங்களில் மணலை திருடி அருகில் உள்ள தனியார் விளைநிலங்களில் குவித்து வைத்து விடுகின்றனர். மறுநாள் இரவு அந்த மணலை டிராக்டர் மூலம் திருடி சென்று விடுகின்றனர். நீர்வரத்துப்பகுதி, ஆற்றின் கரை மற்றும் கால்வாய் பகுதியில் மணல் திருட்டு அதிகமாக நடப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. அவ்வப்போது போலீசாரும், வருவாய்த்துறையினரும் மணல் பறிமுதல் செய்வதுபோல் போக்கு காட்டி விட்டு, அதன்பின் கண்டு கொள்வதில்லை. இதனால் மீண்டும் அதே பகுதியில் மணல் திருட்டு அதிகமாகிறது.நேற்று கூடலுார் சுல்லைக்கரை ஓடையில் திருடப்பட்ட மணல் அருகில் உள்ள விளைநிலத்தில் குவித்து வைக்கப்பட்டது. கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மணல் திருட்டை தடுக்க முன்வரவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X