பொது செய்தி

தமிழ்நாடு

கராத்தே போட்டிகள்: தேனி மாணவர்கள் சாதனை

Added : நவ 29, 2019
Advertisement

கம்பம்: கம்பத்தில் நடந்த தென்மாவட்ட கராத்தே போட்டிகளில் தேனி மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பலர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.கம்பம் ஆலவன் திலக் சிட்டோரியா கராத்தே பள்ளி சார்பாக, தென்மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தது.துவக்க விழாவிற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் துரைநெப்போலியன் தலைமை வகித்தார். தேசிய கராத்தே நடுவர் ராமமூர்த்தி, பாரி முன்னிலை வகித்தனர். மாவட்ட கராத்தே அசோசியேசன் தலைவர் எஸ்.கே.ராமகிருஷ்ணன் வரவேற்றார். போட்டிகளை ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரி செயலர் என்.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.எம்.எல்.ஏ.,க்கள் மகாராஜன்(ஆண்டிபட்டி) , சரவணக்குமார்( பெரியகுளம்) உள்ளிட்ட பலர் குத்துவிளக்கேற்றினர். வயது, எடை, பெல்ட் பிரிவுகளில்நடைபெற்ற போட்டிகளில் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். வனராஜ், கண்ணன், மணிகண்டன், சென்றாயப்பெருமாள், முத்துக்குமரன், கங்குலி, சன்குமார் நடுவர்களாக இருந்தனர்.இதில் கட்டா, குமிட்டேவில் மாணவ , மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் பங்கு பெற்றனர்.சீனியர் பிரிவில் கம்பம் ராம்ஜெயம்வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி முதலிடத்தையும், ஜூனியர்பிரிவில் கம்பம் புனித செயின்ட் மெட்ரிக் பள்ளியும், வயது பிரிவில் உத்தமபாளையம் அல்ஹிக்மா மெட்ரிக் பள்ளியும், எடை பிரிவில் உத்தமபாளையம் கிரசண்ட் பள்ளியும், சூப்பர் சீனியர் பிரிவில் பிலாலியா அரபி பள்ளியும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை உத்தமபாளையம் டி.எஸ்.பி., சின்னகண்ணு வழங்கினார்.பரிசளிப்பு விழாவில், முதல்வர்கள் ஸ்வாதிகா( ராம்ஜெயம்வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி), மேரிகுரியன் (செயின்மேரீஸ் மெட்ரிக் பள்ளி) ஜியாவுல்ஹக் (கிரசண்ட் பள்ளி), அரபிக்கல்லுாரி தாரிக் அகமதுபிலாலி, அல்ஹிக்மா மெட்ரிக் பள்ளி தாளாளர் முகமதுசைபுல் இஸ்லாம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X