பொது செய்தி

தமிழ்நாடு

வாழைக்கு மானிய இலக்கு அதிகரிப்பு: தினமலர் செய்தியால் நடவடிக்கை

Added : நவ 29, 2019
Advertisement

கம்பம்: தினமலர் செய்தி எதிரொலியாக, வாழை விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் இலக்கை அதிகரித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அலுவலகம் உத்தரவிட்டுள் ளது.தேனி மாவட்டத்தில் வாழை சாகுபடி அதிக பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஜி 9 மற்றும் செவ்வாழை ஏற்றுமதி பட்டியலில் உள்ளது. வாழை விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ. 37 ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது.இந்த மானியம் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 40 , 60 எக்டேர் என நிர்ணயம் செய்துள்ள னர்.வட்டார வாரியாக குறைந்தது ஆயிரம் எக்டேர் வரை வாழை சாகுபடி நடைபெறுகிறது.குறிப்பாக கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் வட்டாரங்களில் மிக அதிக பரப்பில்சாகுபடி நடைபெறுகிறது. விண்ணப்பங்கள் அதிகம் வருவதால் இந்த இலக்கை வைத்துக் கொண்டு விவசாயிகளை சமாளிக்க முடியாமல், தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள் திணறி வந்தனர். இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கம்பம் , உத்தமபாளையம் வட்டாரங்களுக்கு தலா 25 எக்டேர் அதிகரித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X