பொது செய்தி

தமிழ்நாடு

கம்பத்தில் கஞ்சாவை கண்டறிய வந்தாச்சு மோப்ப நாய் வெற்றி

Added : நவ 29, 2019
Advertisement
 கம்பத்தில் கஞ்சாவை கண்டறிய வந்தாச்சு மோப்ப நாய் வெற்றி

கம்பம்: கம்பத்தில் கஞ்சா பதுக்கலை கண்டுபிடிக்க வெற்றி என்ற மோப்ப நாயை மாவட்ட போலீஸ் நிர்வாகம் களத்தில் இறக்கிவிட் டுள்ளது.

கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இங்கிருந்து கேரளாவிற்கு அதிகமாக கடத்தப்படுகிறது. இங்கு கிலோ ரூ. 5 ஆயிரம்முதல் ரூ.10 ஆயிரத்திற்குள் கொள்முதல் செய்யப்படும் கஞ்சா, கேரளாவின் எர்ணாகுளம், திருச்சூர், கோட்டயம், பத்தனம்திட்டா போன்ற நகரங்களில் கிலோ ரூ. 50 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. எனவே கேரளா இளைஞர்கள் வாங்க வந்து கைதாகின்றனர்.எனவே கஞ்சா பதுக்கலை கண்டுபிடிக்க முதன் முறையாக வெற்றி என்ற மோப்ப நாயை மாவட்ட போலீஸ் நிர்வாகம் இங்கு களத்தில் இறக்கிவிட்டுள்ளது. இந்த நாய் சந்தேகப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லும் போது, பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கஞ்சாவை கண்டுபிடித்து விடும். இதன்மூலம் எளிதாக கஞ்சா விற்பனையை தடுக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். மூன்று பேர் கைது: நேற்று கம்பத்தை சேர்ந்த வீரமணி 27, குருசாமி 44, சிவமணி 41, ஆகியோரின்வீடுகளில் மோப்பநாயுடன் டி.எஸ்.பி., சின்னகண்ணு தலைமையில் எஸ்.ஐ.,விநோத்ராஜா, மாயன், திவான் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சோதனை செய்தனர். அவற்றில் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X