டெண்டர் நடவடிக்கை தடுத்து நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெண்டர் நடவடிக்கை தடுத்து நிறுத்தம்

Added : நவ 29, 2019

மூணாறு: மூணாறில் பொதுப்பணித்துறையினருக்குச் சொந்தமான வணிக வளாகத்தின் டெண்டர் நடவடிக்கையை வர்த்தகர்கள் , பொது மக்கள் தடுத்து நிறுத்தினர்.கேரளா, மூணாறில் ஊராட்சி அலுவலகம் அருகே பொதுப்பணித்துறையினருக்குச் சொந்தமான ஓய்வு மாளிகை செயல்பட்டு வருகிறது. அதனை சில ஆண்டுகளுக்கு முன் கொச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டது. ஓய்வு மாளிகையையொட்டி ஒப்பந்ததாரர் வணிக வளாகத்தை கட்டி வாடகைக்கு கொடுத்தார். அங்கு கட்டப்பட்ட 24 கடைகளுக்கு முன் பணமாக ரூ. 47 லட்சம் பெறப்பட்டது.ஒப்பந்ததாரர் விதிமுறைகளை மீறியதாக, 2018 டிசம்பர் 27 ல் பொதுப்பணித்துறையினர் ஒப்பந்தத்தை ரத்து செய்து ஓய்வு மாளிகையை மீட்டனர். அங்கு கடைகளை நடத்தி வந்தவர்களுக்கு நாளை( நவ., 30) வரை கால அவகாசம் வழங்கினர்.ஆனால் கால அவகாசம் முடிவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக நேற்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமா, உதவி செயற் பொறியாளர் ஜேக்கப்ஜார்ஜ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கடைகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். முறையாக தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறி அதனைமூணாறு வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இன்று( நவ., 29) டெண்டர் நடவடிக்கை முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.--------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X