பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டிபட்டியில் மழை பெய்தும் கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லை

Added : நவ 29, 2019
Advertisement

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் நள்ளிரவில் மழை பெய்தும் கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து இல்லை.ஆண்டிபட்டி பகுதியில் அடுத்தடுத்து பெய்து வரும் மழை மானாவாரி, இறவை பாசனத்திற்கு ஏற்றதாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர் பயன்பாடு குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு பின் ஆண்டிபட்டியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. வைகை அணை நீர் பிடிப்பு பகுதியான வருஷநாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால், ஆற்றில் கூடுதலான நீர் வரத்து இல்லை. ஆண்டிபட்டி பகுதியில் உள்ள குளங்கள், கண்மாய்களுக்கும் நீர் வரத்து இல்லை. வைகை அணை நீர் மட்டம் நேற்று காலை 64.37 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 2083 கன அடியாகவும், அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 2390 கன அடி நீரும் வெளியேறுகிறது. ஆண்டிபட்டி யில் 15 மி.மீ.,மழை பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X