வருஷநாட்டில் பரவுது 'டைபாய்டு' காய்ச்சல்: பொதுமக்கள் அவதி

Added : நவ 29, 2019
Share
Advertisement
வருஷநாடு: வருஷநாடு, வாலிப்பாறை பகுதிகளில் 'டைபாய்டு' காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.வருஷநாடு, முருக்கோடை, சிங்கராஜபுரம், காமராஜபுரம், வாலிப்பாறை, தண்டியக்குளம், தும்மக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என 80க்கும் மேற்பட்டோர் 'டைபாய்டு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கை ,கால் வீக்கம் ஏற்பட்டு நடக்க

வருஷநாடு: வருஷநாடு, வாலிப்பாறை பகுதிகளில் 'டைபாய்டு' காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.வருஷநாடு, முருக்கோடை, சிங்கராஜபுரம், காமராஜபுரம், வாலிப்பாறை, தண்டியக்குளம், தும்மக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என 80க்கும் மேற்பட்டோர் 'டைபாய்டு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கை ,கால் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பலர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக செல்கின்றனர். சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை காரணமாக பரவிவரும் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த, மலைக்கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X