சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பில் சிக்கிய ஊரணி மீட்பு

Added : நவ 29, 2019
Advertisement

போடி: போடி கரட்டுப்பட்டி ஜக்கப்பன் கோயில் அருகே பல ஆண்டாக தனிநபர்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த ஊரணியை பேரூராட்சி நிர்வாகம் மீட்டது.போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்டது கரட்டுப்பட்டி. இப்பகுதியில் உள்ள ஜக்கப்பன் கோயில் அருகே ஒன்றரை ஏக்கரில் ஜக்கப்பன் ஊரணி அமைந்துள்ளது. \மழைக்காலங்களில் இதில் தண்ணீர் தேங்குவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததோடு, அருகே இருந்த விவசாய நிலங்களும் பயன் அடைந்து வந்தன. முறையான பராமரிப்பு இல்லாத நிலையில் ஊரணியை தனிநபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் இதை ஆய்வு செய்தது. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, உதவி செயற்பொறியாளர் ராஜாராம், போடி தாசில்தார் மணிமாறன், பேரூராட்சி நிர்வாக அலுவலர் கங்காதரன் ஆகியோர் முன்னிலையில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பில் இருந்த மானாவாரி பயிர்கள், முட்புதர்களை அகற்றி ஊரணி மீட்கப்பட்டது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆண்டிபட்டி: ரெங்கசமுத்திரம் கண்மாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.இக்கண்மாய் 192 ஏக்கர் பரப்பு கொண்டது. நாகலாறு ஓடை, வருஷநாடு வைகை ஆற்றில் இருந்து நீர் வரத்து கிடைக்கும்.கோவில்பட்டி, ரெங்கசமுத்திரம், குருவியம்மாள்புரம், குறும்பபட்டி, முத்தனம்பட்டி ஆகிய கிராமங்களில் 217 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பல ஏக்கர் நிலங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். இக்கண்மாயில் பல ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவில் கண்மாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X