பொது செய்தி

தமிழ்நாடு

சமரச மையத்தால் இணைந்து வாழும் நான்கு தம்பதிகள்

Added : நவ 29, 2019
Advertisement

தேனி: தேனி மாவட்ட சமரச மையத்தின் சார்பில் நடந்த சமசர தீர்வுக் கலந்தாய்வுக்கூட்டத்தில் விவாகரத்திற்கு மனு செய்திருந்த நான்கு தம்பதிகள் சேர்ந்து வாழ உறுதி மொழி எடுத்து இணைந்தனர்.

உத்தமபாளையம் அனுமந்தம்பட்டி ஆரோக்கியசாமி 38. அதேபகுதி ஜான்சிராணி 35. இவர்களுக்கு 2010 ஆக., 22ல் அனுமந்தன்பட்டியில் திருமணம் முடிந்தது. இடுக்கி மாவட்டம் பாம்பாடும்பாறை கீதா 29. போடி மீனாட்சிபுரம் ரவி 30. இவர்களுக்கு 2014ல் போடியில் திருமணம் முடிந்தது. தேனி கோடாங்கிபட்டி திருநகர் காலனி ரம்பா 32. அதேபகுதி பிரபு 34. இருவருக்கும் 2003 நவ.,6ல் திருமணம் முடிந்தது. தேனி அல்லிநகரம் குறிஞ்சிநகர் நாகலிங்கம் 35, விருதுநகர் அல்லம்பட்டி கண்ணபிரான் தெரு காஞ்சனா தேவி 30. இவர்களுக்கு 2011 டிச., 5ல் திருமணம் முடிந்தது. இவர்களுக்கு பிரதீபா, சந்துரு என்ற குழந்தைகள் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் நான்கு தம்பதிகளும் மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு மனு செய்திருந்தனர். இவற்றை சமரச தீர்வு மையம் மூலம் விசாரிக்க மாவட்ட நீதிபதி விஜயா உத்தரவிட்டார். சமரச தீர்வு மையத்தில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் ,மாவட்ட நீதிபதி முகம்மது ஜியாவுதீன் தலைமையில், ஆரோக்கியசாமி -- ஜான்சிராணி தம்பதிக்கு சமரச தீர்வாளர் ஜான்மோகன்தாஸூம், ரவி -- கீதா தம்பதிக்கு குணசேகரனும், பிரபு- - ரம்பா தம்பிக்கு கணேசனும், நாகலிங்கம் -- காஞ்சனாதேவி தம்பதிக்கு தாமோதரன் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு, நான்கு தம்பதியினரும் மனமுவந்து இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.அறப்பணி: சமரச தீர்வு மைய நீதிபதி கூறுகையில், கணவர், மனைவி விவாகரத்து செய்வது என்பது வேறு. அப்பா ,- அம்மா விவாகரத்து செய்வது என்பது வேறு. குழந்தைகளுக்கு இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து பிடிவாதம் இன்றி சிறு குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக வாழ அறிவுரை கூறினோம். பின் அவர்கள் உறுதி மொழி ஏற்று, இணைந்து சென்றனர். சமரசம் செய்து வைப்பது இறை வழிபாட்டுக்கு சமமானது. இந்த அறப்பணி நீதித்துறையின் வழிகாட்டுதலில் இனிவரும் காலங்களில் தொடரும்'', என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X