பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்

Added : நவ 29, 2019
Advertisement

தேனி: '' வாய்ப்புக்களை தவறாமல் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்,''என, பள்ளி மாணவர்களுக்கு, ஆன்மிக சொற்பொழிவாளர் கிருஷ்ண சைதன்ய தாஸ் அறிவுரை வழங்கினார்.

தேனி அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில், குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட்' சார்பில், ஆன்மிக சொற்பொழிவாளர் கிருஷ்ண சைதன்யதாஸ், மாணவர்களிடம் ஒழுக்க நெறிமுறைகள் குறித்து பேசியதாவது:நமக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை தவறாமல் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். சிறு சிறு நல்ல செயல்களையும், சரியான நேரத்தில் செய்தால் பெரிய செயல்களை சுலபமாக செய்ய முடியும். நேரத்தை தவறவிட்டால் எவ்வளவு பணம் அள்ளிக் கொடுத்தாலும், அதனை திரும்பப் பெற முடியாது என்பதை மனதில் கொண்டு, நேரத்தை வீணடிக்காமல் நற்செயல்களை செய்து முடிக்க வேண்டும். இறை நாமத்தை சொல்லி பிரார்த்தனை செய்தால் மனது ஒருநிலைப்படும். அப்போது செய்யப்படும் செயலில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.'' என்றார். ஹரே ராம, நாமகீர்த்தன கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது. சொற்பொழிவில் இருந்து கேள்விகள் கேட்க்கப்பட்டு பதில் கூறிய மாணவர்களுக்கு முரளிதர சுவாமி எழுதிய நுால்களை பள்ளி முதல்வர் பரந்தாமன் வழங்கினார். துணை முதல்வர் வினோத்குமார், மேலாளர் கார்த்திகேயன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X