பொது செய்தி

தமிழ்நாடு

'கொடை'யில் போக்குவரத்து இடையூறான வாகனங்கள்

Added : நவ 29, 2019
Advertisement

கொடைக்கானல்: கொடைக்கானல் உட்வில் ரோட்டில் நிறுத்தப்படும் உணவகங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.கொடைக்கானல் நகரில் அண்ணாசாலை, உட்வில் ரோடுகளில் வணிக நிறுவனம், வங்கிகள் ஏராளமாக உள்ளன. செவன் ரோட்டிலிருந்து பஸ்ஸ்டாண்டுக்கு வரும் ரோடு ஒரு வழிப்பாதையாக உள்ளது.இங்குக குறுகிய ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுவதும், போலீசார் சரிசெய்வதும் வாடிக்கையான ஒன்று. இப்பகுதியில் பார்க்கிங் வசதி இல்லாத நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை ரோட்டோரம் நிறுத்துகின்றனர். பஸ்ஸ்டாண்ட் ரோட்டின் திருப்பத்தில் வாகனங்கள் நிற்பதால் கனரக வாகனங்கள் செல்லும்போது நெரிசல் அதிகமாகிறது. சீசன் தருணங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. தொடரும் பிரச்னை குறித்து புகார் தெரிவித்தும் போக்குவரத்து அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் விருப்பம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X