பொது செய்தி

தமிழ்நாடு

சோளம் மக்காச்சோளம் விளைச்சல் இல்லை

Added : நவ 29, 2019
Advertisement

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால், 85ஆயிரம் எக்டேர் மானவாரியாக சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளம், மக்காச்சோளம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 770 மி.மீ., மழை பெய்ய வேண்டும். அக்டோபரில் பெய்த மழையின் பயனாக ஒரு லட்சம் எக்டேர் நெல், மக்காச்சோளம், சோளம், பருத்தி, கம்பு, பருத்தி, கடலை, தட்டைப்பயிறு, உளுந்து சாகுபடி செய்துள்ளனர்.மழை குறைவு: இதில் 85ஆயிரம் எக்டேர் மழையை நம்பி மானாவாரியாக சாகுபடி செய்துள்ளனர். ஆனால் இவ்வாண்டு தற்போதுவரை 550 மி.மீ., மழைதான் பெய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் 150 மி.மீ., மழை பெய்தது. ஆனால் இவ்வாண்டு 57 மி.மீ.,தான் பெய்துள்ளது. இதனால் மானாவாரி சாகுபடி பாதித்துள்ளது. இனிவரும் நாட்களில் மழைபெய்தால் மட்டுமே விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் பெறமுடியும்.பயிர்க்காப்பீடு செய்யலாம்: வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டை ஒப்பிடும்போது திண்டுக்கல்லில் மழை குறைவுதான். இருப்பினும் சோளம், மக்காச்சோளம் தற்போது 50 முதல் 70 சதவீதம் வரை வளர்ந்துள்ளது. அவ்வப்போது துாறல் பெய்வதால் விளைச்சல் பாதிக்க வாய்ப்பு குறைவே. அடுத்த சாகுபடிக்கு பாதிக்கும் வாய்ப்புள்ளது. நஷ்டத்தை தவிர்க்க விவசாயிகளை பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர வலியுறுத்தியுள்ளோம். ரூ.200 முதல் ரூ.300வரை பிரீமியம் செலுத்தினால் ஒரு எக்டேருக்கு அதிகபட்சம் ரூ.25ஆயிரம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X