வேடசந்துார்: வேடசந்துார் சாய்பாரத் கல்வியியல் கல்லுாரியில் இயற்பியல் மன்றம் துவக்கப்பட்டது. காந்தி கிராம பேராசிரியர் ராஜமோகன் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ''அன்றாட வாழ்வில் இயற்பியலின் பங்கு மற்றும் பயன்கள் குறித்து'' விளக்கினார். நிர்வாக அலுவலர் ஸ்டாலின், கல்லுாரி முதல்வர் சாந்தி, துணை முதல்வர் தேசிங்குராஜன், பேராசிரியர்கள் மணிமேகலை, கோபாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.
Advertisement