பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருத்துவமனைக்கு வராத டாக்டர்கள்

Added : நவ 29, 2019
Advertisement

திண்டுக்கல்: 'அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு டாக்டர்கள் வருவதில்லை' என, திண்டுக்கல்லில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., வேலு, திட்ட இயக்குனர் கவிதா, வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை, தோட்டக்கலை துணை இயக்குனர் சீனிவாசன்,நேர்முக உதவியாளர் ரவி பாரதி முன்னிலைவகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:விவசாயிகள்:கிராமப்புற அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு டாக்டர்கள் வருவதில்லை. எப்போதாவது வந்தாலும் மருந்துகள் இல்லாததால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. மழைக்காலம் என்பதால் கால்நடை நோய்கள் வேகமாக பரவி வருகிறது.கால்நடை அதிகாரி: மருந்து பற்றாக்குறை உள்ளதால், தேவையான மருந்துகள் கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வராத டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயிகள்:நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணியில் ஈடுபடுத்த வேண்டும். விவசாயத்திற்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை. பொருட்களை விளைவிக்கும் விவசாயியால் விலையை நிர்ணயிக்க முடிவதில்லை. அரசு வேளாண், தோட்டக்கலை பயிர்களை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.திட்ட இயக்குனர்:நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணியிலும் ஈடுபடுத்தும் திட்டம் உள்ளது. தேவைப்படும் இடங்களுக்கு நுாறு நாள் வேலை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.விவசாயிகள்: சொட்டு நீர்பாசனத்திற்கு அரசு மானியம் வழங்குகிறது. ஆனால், சொட்டு நீர் பாசன நிறுவனங்களோ பணம் கேட்டு விவசாயிகளை தொந்தரவு செய்கின்றனர். பணம் கொடுத்தாலும் தரமான குழாய், பம்புகளை கொடுப்பதில்லை.எம்.எல்.ஏ., செந்தில்குமார்:கொடைக்கானல், தாண்டிக்குடி கீழ்மலைப் பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் புகும் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயிகள் உயிரிழப்பை தடுக்க வேண்டும். பாலாறு - பொருந்தலாறு அணையின் உபரி நீர் வீணாவதை தடுக்க, வாய்க்கால்களின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.விவசாயிகள்:ஆத்துார் உட்பட பல பகுதிகளில் மூலிகைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மூலிகைப் பயிர் சாகுபடிக்குமானியம் வழங்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X