மதுரையில் அலுவலர் ஒன்றிப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் அலுவலர் ஒன்றிப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

Added : நவ 29, 2019

மதுரை: லைசென்ஸ் சர்வேயர் நியமன முறையை கைவிடுவது உள்ளிட்டஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில பொருளாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் சசிதரன், பேச்சியப்பன், விஜயகுமார், அண்ணாமலை பரமசிவன், சுரேஷ், சரவணன், வேல்முருகன், செல்வரங்கன், நாகராஜன் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர்கள் சிவக்குமார், ஸ்டேன்லி கோரிக்கைகளை விளக்கினர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் மங்களபாண்டியன், ஒன்றிப்பு மாநில முன்னாள் செயலாளர் ஆசைதம்பி, புல உதவியாளர் சங்க துணை தலைவர் முருகன் பேசினர்.துணை ஆய்வாளர்,ஆய்வாளர் சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும். உயர்நிலை அலுவலர், களப்பணியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X