போலீஸ் செய்திகள்...

Added : நவ 29, 2019
Advertisement

வரதட்சணை: 7 பேர் மீது வழக்கு
மேலுார்: நரசிங்கம்பட்டி வைசாலி 21, கொடிக்குளம்மலைசெல்வம் 34, (இடையபட்டி காவலர் பயிற்சி பள்ளியில் எஸ்.ஐ., ஆக பணிபுரிகிறார்). இருவருக்கும் 2018 திருமணம் நடந்தது. நகை, பணம், கார் சீர்வரிசையாக வழங்கப்பட்டன. மேலும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாக கணவர் மலைசெல்வம், உறவினர் விவேக் 30(மதுரை ஆயுத படை போலீஸ்), மாமியார் மகாதேவி உள்ளிட்ட 7 பேர் மீது வைசாலி மகளிர் போலீசில் புகார் செய்தார். 7 பேர் மீதும் வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

அலைபேசி பறிப்பு
மேலுார்: ஸ்ரீவில்லிபுத்துார் முத்துச்சாமி 19, டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்து வெள்ளரிப்பட்டி தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு நேர ஷிப்டில் பணிபுரிய வெள்ளரிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது டூவீலரில் சென்ற மர்ம நபர்கள் மூவர் முத்துச்சாமியை தாக்கி அலைபேசியை பறித்து தப்பினர். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.ரூ.1.50 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்குமேலுார்: மேலுார் சபரி மணிகண்டன் 26, ஏழு மாதங்களுக்கு முன் நெல்லை புட் புராடக்ஸ் நிறுவனத்திற்க்கு டீலர் தேவை விளம்பரத்தை கண்டு திருச்சி மாறனை அலைபேசியில் தொடர்பு கொண்டார். பின் மேலுார் வந்த மாறன் நிறுவனத்தின் பொருட்களை காண்பித்து அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டினார். வங்கி மூலம் ரூ.1.50 லட்சத்தை பெற்ற மாறன் பொருட்களையும், பணத்தையும் தராமல் காலம் கடத்துவதாக சபரிமணிகண்டன் புகார் செய்தார். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆற்றில் மணல் திருட்டு
காடுபட்டி: எஸ்.ஐ., வாண்டையன் தலைமையில் போலீசார் குருவித்துறை வைகை ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றனர். இரு டிராக்டர்களில் மணல் திருடிய கும்பல் போலீசாரை கண்டதும் டிராக்டருடன்தப்பியது. டிரைலரை பறிமுதல் செய்த போலீசார் தப்பிய குருவித்துறை சுரேந்திரன் 25, உதயன் 32, ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X