பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சியில் 1,251 ஓட்டுச்சாவடிகள் 'ரெடி': வேகமெடுக்கும் தேர்தல்

Added : நவ 29, 2019
Advertisement



மதுரை: மதுரை மாநகராட்சியில்உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவிற்காக 1,251 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழக உள்ளாட்சிக்கு விரைவில் தேர்தல் நடக்க இருப்பதால், மதுரை மாநகராட்சியில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.தவிர தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர், உதவி அலுவலர்களுக்கான பட்டியல்தயாராகிறது. இவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் மேற்கு மண்டலத்தில் 338, வடக்கு மண்டலத்தில் 320, கிழக்கு மண்டலத்தில் 287, தெற்கு மண்டலத்தில் 306 என மொத்தம் 1,251 ஓட்டுச்சாவடிகள் உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன.அங்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களுக்கான அனைத்து வசதிகள் இருப்பதை உறுதி செய்யவும், குறைபாடுகள் இருப்பின் உடனடியாக களையவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம். அறிவிப்பு வந்தவுடன் அடுத்தக்கட்ட பணிகளில் ஈடுபடுவோம்.லோக்சபா தேர்தல் சமீபத்தில் தான் முடிந்திருப்பதால் பெரிய அளவில் ஓட்டுச்சாவடிகளில் வசதிகளை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்காது,'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X