மதுரை: மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 15 ஆயிரம் பேர் அரிசி கார்டுதாரர்களாக மாறினர்.
பொது விநியோக திட்டத்தின் கீழ் சர்க்கரை விருப்ப ரேஷன்கார்டுதாரர்கள் அரிசி பெறும் வகையில் மாற்றிடலாம் என முதல்வர் பழனிசாமி நவ., 19 அறிவித்திருந்தார். நேற்று வரை 15 ஆயிரம் சர்க்கரை கார்டுதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து அரிசிக்கு மாற்றிக்கொண்டனர். இதற்காக அவகாசத்தை அரசு நீடித்தது. இன்றைக்குள் விருப்பமுள்ள சர்க்கரை கார்டுதாரர்கள் அரிசிக்கு மாற்றிக் கொள்ளலாம். இதன் பிறகு கால அவகாசம் வழங்கப்படாது என கலெக்டர் வினய் தெரிவித்தார்.