இம்மாவட்டத்தில் மதுரை மாநகராட்சிக்கு வைகை 1, 2 திட்டங்கள், காவிரி கூட்டு திட்டம் மற்றும் போர்வெல்கள் மூலம் குடிநீர் பெறப்படுகிறது.
13 ஒன்றியங்களிலுள்ள 420 ஊராட்சிகளுக்கு வைகை, காவிரி திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. சில ஒன்றியங்களில் உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. உசிலம்பட்டி, பேரையூர், கள்ளிக்குடி தாலுகாக்களில் சில கிராமங்களுக்கு குடிநீர் சப்ளையில்லை. அக்கிராமத்தினர் தொடர்ந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அதிகாரிகள் ஆய்வில் 281 குக்கிராமங்களிலும் எந்த திட்டத்திலும் குடிநீர் சப்ளை இல்லாதது தெரிந்தது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரியங்கா, செயற் பொறியாளர் அனுராதா, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை மற்றும் அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசித்தார். குடிநீர் வசதியில்லாத கிராமங்களுக்கு வைகை, காவிரி திட்டங்களை விரிவுபடுத்தி குடிநீர் வழங்க உத்தரவிட்டார். இதற்காக பொது நிதியிலிருந்து பணம் ஒதுக்குவதாகவும் தெரிவித்தார். உள்ளூர் நீர் ஆதாரங்களை கண்டறிந்து குடிநீர் வழங்கவும் அறிவுறுத்தினார்
மதுரை மாவட்டத்தில் 420 ஊராட்சிகளிலுள்ள ஆயிரத்து 600 கிராமங்களுக்கும் வைகை, காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் வினய் உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE