பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம்

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
FSSAI,TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு,Tamil Nadu food, most unsafe, country,பாதுகாப்பற்ற உணவு, விற்பனை, முதலிடம்

சென்னை: பாதுகாப்பற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வினியோகிக்கப்படும் பாலில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, நஞ்சு அதிகமிருப்பதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம்(FSSAI), சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, பாதுகாப்பற்ற உணவுகள் தமிழகத்தில் தான் அதிகம் விற்படுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து FSSAI வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 2018 - 19 ஆண்டில், ஆய்வுக்கு எடுத்த உணவு பொருட்களில் 45.3 சதவீத உணவுகள், தரம் குறைவாகவும், 12.7 சதவீத உணவுகள் பாதுகாப்பற்றதாகவும் இருந்தது. தமிழகத்தில் சோதனை செய்யப்பட்ட, 5,730 உணவு மாதிரிகளில், 728 உணவுகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. தமிழகத்தில் 2018 - 19 ஆண்டில், 666 குற்றவியல் நடவடிக்கைகளும், 1,718 சிவில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ரூ.5.01 கோடி அபராதம் தமிழகத்தில் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஅதே சமயம், இந்தியா முழுவதும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 1,06,459 உணவு மாதிரிகளில், 30,415 உணவுகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. 2,813 குற்றவியல் நடவடிக்கைகளும், 18,550 சிவில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, ரூ.32.57 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் கலப்படம் செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகம்(12.7%) முதலிடமும், அசாம்(8.9%) 2வது இடமும், ஜார்கண்ட்(8.8%) 3வது இடமும் பிடித்துள்ளன. 4வது, 5வது இடங்கள் முறையே, மேற்கு வங்கம்(7.6%), ஒடிசா(6.7%) இடம்பெற்றுள்ளன.


latest tamil newsதமிழகத்தில், உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள், தர சோதனையில் தோல்வி அடைந்ததற்கு, விவசாயிகள் ரசாயனங்கள் மற்றும் அசுத்தமான உரங்களை பயன்படுத்துவதால் தான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-நவ-201914:58:16 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் // 45.3 சதவீத உணவுகள், தரம் குறைவாகவும், 12.7 சதவீத உணவுகள் பாதுகாப்பற்றதாகவும் இருந்தது// இதற்க்கு விதிக்கப்பட்ட அபராதம் வெறும் ஐந்து கோடி . அது சரி உங்களுக்காக வசூலித்த அபராத தொகை எவ்வளவு , 50 கோடியா ?
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
29-நவ-201912:09:07 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு நூற்றுக்கு நூறு உண்மை சார் இங்கே இருப்பவர்கள் பணம் சம்பாரிக்கணும் அது தான் குறி ஒரு ETHICS இல்லாதவர்கள் இந்த மாதிரி சிறிய மாநிலங்களில் உண்டு அனால் சென்னையில் ரொம்ப மோசம் என்ன காரணமோ
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
29-நவ-201912:04:25 IST Report Abuse
konanki ஐய்யா -கல் தோன்றி மண் தோன்ற மூத்த குடி தமிழ் குடி - தமிழகம் முதலிடம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X