பொது செய்தி

தமிழ்நாடு

ஆதிவராகநல்லுார் கிராமத்தில்'கலாஜதா' விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : நவ 29, 2019
Advertisement

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த ஆதிவராகநல்லுார் கிராமத்தில், வேளாண்மை துறையின் அட்மா திட்டத்தின் கீழ், 'கலாஜதா' விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

வேளாண்மை உதவி இயக்குநர் விஜயராகவன் தலைமை தாங்கினார். வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், நடப்பு சம்பா பயிரினை காப்பீடு செய்திட, கடன் பெறாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வாடிக்கையாளர்கள் சேவை மையங்களிலும் பிரிமியத் தொகையை நாளை 30ம் தேதி வரை செலுத்தலாம் என கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஏற்பாடுகளை, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் வசுமதி, மனோஜ் செய்திருந்தனர். தொழில் நுட்ப மேலாளர் ஆனந்தசெல்வி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X