பொது செய்தி

தமிழ்நாடு

'இளம் படைப்பாளர் விருது'

Added : நவ 29, 2019
Advertisement

பெண்ணாடம் : நுாலகத்துறை சார்பில், மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வென்ற மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.

மாவட்ட மைய நுாலகத்துறை சார்பில், 6 முதல் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 'இளம் படைப்பாளர் விருது' வழங்க 'வாழ்விற்கு உயர்வு தருவது வாசிப்பே' என்ற தலைப்பில் பேச்சு போட்டி; 'வாசித்தேன் வளர்ந்தேன்' தலைப்பில் கட்டுரை; 'என் எதிர்காலம் என் கையில்' என்ற தலைப்பில் கவிதைபோட்டி நடத்தப்பட்டது.திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், திட்டக்குடி, பெண்ணாடம் பகுதி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இப்போட்டிகளில், பெண்ணாடம் ஊராட்சி ஒன்றிய தெற்கு நடுநிலைப்பள்ளி சார்பில் மூன்று மாணவர்கள் பங்கேற்றனர்.அதில், 8ம் வகுப்பு மாணவி பிரியா மாவட்ட அளவில் நடந்த பேச்சு போட்டியில் முதலிடம் பெற்று 'இளம் படைப்பாளர் விருது'க்கு தேர்வு செய்யப்பட்டார். மேலும், கவிதை போட்டியில் மாணவி உமா, கட்டுரை போட்டியில் ரித்தீஷ் ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட மைய நுாலகத்தில் கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் நடந்த விழாவில், அமைச்சர் சம்பத் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.போட்டிகளில் வென்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி பாராட்டி, வாழ்த்தினார். அப்போது, ஆசிரியர்கள் குணசேகரன், நாகலட்சுமி, தனலட்சுமி, கவிதா, மாணவர்கள் உட்பட பலர் பங்கேற் றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X