இரண்டாம் நிலை காவலர் பணி பெண்களுக்கான திறன் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டாம் நிலை காவலர் பணி பெண்களுக்கான திறன் தேர்வு

Added : நவ 29, 2019
Share

விழுப்புரம் : விழுப்புரம் ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு, பெண்களுக்கு நடந்த உடல் தகுதி திறன் தேர்வின் போது, மழை பெய்ததால் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் மூலம் எழுத்து தேர்வில் தேர்வாகிய, இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களான விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த 6ம் தேதி முதல் விழுப்புரம், காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் உடல் தகுதி திறன் தேர்வு நடைபெற்று வருகிறது.எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில், நேற்று நடந்த பெண்களுக்கான உடல் திறன் தேர்விற்கு, 920 பேருக்கு அழைப்பாணை விடப்பட்டிருந்தது. இதில், பெண்களுக்கு நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கிரிக்கெட் பந்து எறிதல், ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் வைக்கப்பட்டு தேர்ச்சி பெறாதவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் உடற்தகுதி திறன் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தேர்வு நிறுத்தப்பட்டு, நாளை 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இன்று ஆண்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு, 1,900 பேருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X