சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராய வியாபாரிக்கு 'குண்டாஸ்'

Added : நவ 29, 2019
Advertisement

கடலுார் : கடலுாரில் சாராய வியாபாரி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலுார் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் புதுப்பாளையம் பகுதியில் கடந்த 11ம் தேதி ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சரவணன், 47, என்பவர் 150 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது கடலுார் புதுநகர் காவல் நிலையம், மது விலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளன. அவரது குற்றச் செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., பரிந்துரையின்படி, சரவணனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள சரவணனிடம் போலீசார் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X