பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் மேம்பாலத்தில் எரியாத விளக்குகள் சீரமைக்கும் பணி

Added : நவ 29, 2019
Advertisement

திண்டிவனம் : 'தினமலர்' செய்தி எதிரொலியால், திண்டிவனம் மேம்பாலத்தில் எரியாமல் இருந்த சோடியம் விளக்குகள் சீரமைக்கும் பணி நேற்று நடந்தது.

திண்டிவனம் மேம்பாலத்தில் பஸ் நிலையத்திற்குள் வராத பஸ்கள் பல்வேறு மார்க்கங்களுக்கு செல்கின்றன. எப்போதும் போக்குவரத்து பிசியான இடம் என்பதால், மேம்பாலத்தில் சோடியம் விளக்குகள் அதிமாக போடப்பட்டுள்ளது.இந்த விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல் அந்த பகுதி இருளில் மூழ்கியது. இப்பகுதியில் புதுச்சேரி யிலிருந்து திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், மேல்பகுதியில் பஸ்களை நிறுத்தி, பயணிகளை இறக்கிவிட்டுச் செல்வதால், இருள் சூழ்ந்த இடத்தில் சாலையை கடக்கும் பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, நேற்று'தினமலர்' நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது.அதனைத் தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் ஸ்ரீபிரகாஷ் உத்தரவின் பேரில், நேற்று காலை, மேம்பாலத்தில் ராட்சத கிரேன் மூலம் எரியாத சோடியம் விளக்குகள் அகற்றப்பட்டு புதிதாக மின் விளக்குகள் பொறுத்தும் பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X