சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு

Added : நவ 29, 2019
Share
Advertisement
கடலுார் : கடலுாரில் நேற்று இரவு காற்றுடன் பெய்த மழைக்கு, மரம் விழுந்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது; போக்குவரத்து பாதித்தது.கடலுார் பகுதியில், நேற்று இரவு 9 மணியளவில், காற்றுடன் மழை பெய்தது. 9:20 மணிக்கு கடலுார், மஞ்சக்குப்பம் சப் ஜெயில் ரோட்டோரம் இருந்த 60 ஆண்டுகள் பழமையான ஒதிய மரம் காற்றில் சாய்ந்து, சாலையின் குறுக்கே விழுந்தது. இதில், அவ்வழியாக சென்ற மின் கம்பம்,

கடலுார் : கடலுாரில் நேற்று இரவு காற்றுடன் பெய்த மழைக்கு, மரம் விழுந்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது; போக்குவரத்து பாதித்தது.

கடலுார் பகுதியில், நேற்று இரவு 9 மணியளவில், காற்றுடன் மழை பெய்தது. 9:20 மணிக்கு கடலுார், மஞ்சக்குப்பம் சப் ஜெயில் ரோட்டோரம் இருந்த 60 ஆண்டுகள் பழமையான ஒதிய மரம் காற்றில் சாய்ந்து, சாலையின் குறுக்கே விழுந்தது. இதில், அவ்வழியாக சென்ற மின் கம்பம், மற்றும் ஒரு வேப்ப மரம் சாய்ந்து விழுந்தது. மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது.தகவலறிந்த கடலுார் தீயணைப்பு நிலைய அதிகாரி சீனுவாசன் தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின் ஊழியர்கள் உதவியுடன், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், சப் ஜெயில் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இரவு 10:30 மணிக்குமேல் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X