விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட மைய நுாலகத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இளம் படைப்பாளர் விருதுக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடந்தது.வாசக வட்ட தலைவர் சொக்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) சுப்ரமணியன் வரவேற்றார். மாவட்ட நுாலக அலுவலக கண்காணிப்பாளர் வெங்கடேசன், வாசகர் வட்ட செய்தி தொடர்பாளர் விக்கிரமன் முன்னிலை வகித்தனர்.சம்பந்தம், மாதவகிருஷ்ணன், வல்லபராசு, ஆசிரியர்கள் பழனிவேல், சிவஞானம், புனிதா ஆகியோர் நடுவர்களாக இருந்து, மாவட்ட அளவிலான முதல் மூன்று இடங்களைப் பிடித்த நபர்களை தேர்வு செய்தனர்.இம்மாணவர்களுக்கு பொது நுாலகத்துறை சார்பில் இளம் படைப்பாளர் விருது, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மாவட்ட மைய நுாலகர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.