சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி கடத்தல்; காதலன் தந்தை கைது

Added : நவ 29, 2019
Advertisement

சிதம்பரம் : பள்ளி மாணவி கடத்தல் வழக்கில் தந்தையை கைது செய்த போலீசார், தாய், மகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

சிதம்பரம் அடுத்த பழைய பூலாமேட்டை சேர்ந்தவர் குறள்மணி மகன் அருண், 21. இவர் சிதம்பரத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., படித்து வருகிறார். அருணும், சிதம்பரம் அடுத்த கிராமத்தை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும், 15 வயது சிறுமியும் காதலித்துள்ளனர். இதற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி, பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விசாரணையில் பள்ளிக்கு சென்ற போது, மாணவியை, காதலன் அருண், அவரின் தந்தை குறள்மணி, தாய் அம்பிகா ஆகிய மூவரும் காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து கணேசமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார், வழக்குப் பதிந்து, தந்தை குறள்மணியை கைது செய்து சிதம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அருண், அம்பிகா மற்றும் சிறுமியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X