பொது செய்தி

தமிழ்நாடு

சம்பா, ராபி நெற்பயிர்களுக்கு காப்பீடு; கலெக்டர் வேண்டுகோள்

Added : நவ 29, 2019
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், சம்பா மற்றும் ராபி பருவ நெற்பயிர்களுக்கு, விவசாயிகள் காப்பீடு செய்யுமாறு, கலெக்டர் அண்ணாதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், நடப்பு ராபி பருவத்தில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்துவது குறித்த மாவட்ட குழுக் கூட்டம் நடந்தது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.கூட்டத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட, இத்திட்டத்தில் பங்கேற்கும் வேளாண்மைத் துறை, புள்ளியியல் துறை, கூட்டுறவு துறை மற்றும் வணிக வங்கிகள், காப்பீட்டு நிறுவனம் ஆகியவை செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து, அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு நெல் சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும், வரும் 30ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.இதன் மூலம், விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களான அதிக மழை, வெள்ளம், புயல், பூச்சிநோய் தாக்குதல், எதிர்பாராத வறட்சி, பருவநிலை மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக, கிராம அளவில் ஏற்படும் சராசரி மகசூல் இழப்பிற்கு, காப்பீட்டு தொகை வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X