சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி, குழந்தை மாயம்; கணவர் போலீசில் புகார்

Added : நவ 29, 2019
Advertisement

சிதம்பரம் : ஊருக்கு சென்ற மனைவி, மகளை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

புவனகிரி அடுத்த தென் தலைக்குளத்தை சேர்ந்தவர் பசுபதி, 25; விவசாயி. இவரது மனைவி சங்கரி, 22; குழந்தை கவிஸ்ரீ, 1. கடந்த 23ம் தேதி சங்கரி குழந்தையுடன் ஜெயங்கொண்ட பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். மறு நாள் காலை, வீட்டிற்கு செல்ல உறவினர் ஊரில் இருந்து பஸ்சில் சிதம்பரம் பஸ் நிலையம் வந்தார். பஸ் நிலையத்தில் இருந்து சங்கரி, கணவர் பசுபதியிடம் மொபைல் போனில் பேசி உள்ளார். பின்னர் பசுபதி அரை மணி நேரம் கழித்து தொடர்பு கொண்ட போது, மொபைல் போன் அனைக்கப்பட்டிருந்தது. மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பசுபதி கொடுத்த புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X