சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையோர புளியமரம் விழுந்து புளிய மரம்

Added : நவ 29, 2019
Advertisement

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே கனமழையால் சாலையோரம் இருந்த புளிய மரம் மின் கம்பிகள் மீது விழுந்ததில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. கண்டமங்கலம் அடுத்த பாக்கம் கூட்ரோட்டில் இருந்து கடலுார் செல்லும் சாலையில் கோண்டூரில் நெடுஞ்சாலையோரம் இருந்த 120 ஆண்டுகள் பழமையான புளிய மரம் வேரோடு, கணேசன் என்பவர் வீட்டின் மீது சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதுமில்லை.மரம் விழுந்ததில் சாலையோரம் மற்றும் வாணியர் வீதியில் மின் கம்பிகள் அறுந்து விழந்தன. தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.மின்துறை பாக்கம் இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் இருந்து இளநிலை பொறியாளர் மனோகர் தலைமையில் போர்மேன் காத்தமுத்து, மின்பாதை ஆய்வாளர்கள் குணசேகரன், கலியமூர்த்தி, எலக்ட்ரீஷியன் குணசேகரன், முருகன் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியின் மின்சார வினியோகம் தடைபட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X