விருத்தாசலம் : ஆட்டோ டிரைவர் மனைவியை பின்தொடர்ந்து வந்து, வீட்டிற்குள் நுழைய முயன்ற வட மாநில ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.விருத்தாசலம், ஆலடிசாலையை சேர்ந்தவர் பாண்டியன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி நேற்று இரவு 8:30 மணியளவில், வீட்டருகே உள்ள கடைக்கு சென்றுவிட்டு நடந்து வந்தார். அப்போது, 25 வயது மதிக்கத்தக்க வடமாநில நபர் ஒருவர், அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார்.பயந்து போன அவர், வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டதும், மர்ம நபர் வீட்டின் கதவை தட்டியுள்ளார்.அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிடவே, அங்கிருந்த பொது மக்கள், மர்ம நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். அவர், பீகார் மாநிலத்தைசேர்ந்த பிரமோத்பாண்டி என்பதும், டைல்ஸ் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது. விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.