பொது செய்தி

தமிழ்நாடு

ஏழு தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை

Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழறிஞர்கள் ஏழு பேரின் நுால்களை நாட்டுடமையாக்கும் வகையில், அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.தமிழில் மிகச்சிறந்த அறிஞர்களின் படைப்புகளை வெளியிடும் உரிமையை ஏற்று, தமிழக அரசு, இதுவரை, 149 தமிழறிஞர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில், 29 நுால்களை எழுதிய, உளுந்துார்பேட்டை சண்முகம், திரைப்படப் பாடலாசிரியரும், 'கறுப்பு
ஏழு தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை

சென்னை: தமிழறிஞர்கள் ஏழு பேரின் நுால்களை நாட்டுடமையாக்கும் வகையில், அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

தமிழில் மிகச்சிறந்த அறிஞர்களின் படைப்புகளை வெளியிடும் உரிமையை ஏற்று, தமிழக அரசு, இதுவரை, 149 தமிழறிஞர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில், 29 நுால்களை எழுதிய, உளுந்துார்பேட்டை சண்முகம், திரைப்படப் பாடலாசிரியரும், 'கறுப்பு மலர்கள்' நுாலுக்காக, யுனெஸ்கோ விருது பெற்ற கவிஞருமான நா.காமராசு, பாரதிதாசன் ஆய்வு நுால்களை எழுதிய இளவரசு ஆகியோரின் நுால்களை நாட்டுடைமையாக்க, அவர்களின் வாரிசுகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, தொல்காப்பியத்துக்கு உரை எழுதி பதிப்பித்த, தமிழறிஞர் அடிகளாசிரியர், தனித்தமிழின் சிறப்பை எழுதிய, புலவர் இறைக்குருவனார், பெண்களின் முன்னேற்றத்துக்காக எழுதிய பண்டிதர் கோபாலகிருஷ்ணன், குழந்தைகளுக்காக எழுதிய பாபநாசன் குறள்பித்தன் ஆகியோரின் நுால்களையும் நாட்டுடைமையாக்க, அவர்களின் வாரிசுகள் சம்மதித்துள்ளனர்.

இதையடுத்து, ஒவ்வொருவரின் வாரிசுகளுக்கும், தலா, ஐந்து லட்சம் ரூபாய் என, 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, ஏழு தமிழறிஞர்களின் நுால்களையும் நாட்டுடைமையாக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
29-நவ-201907:00:05 IST Report Abuse
Rangiem N Annamalai ஐந்து லச்சம் மிகவும் குறைவான தொகை .25 லச்சமாக உயர்த்தலாம் .தமிழுக்கு விலை இல்லை அதுபோல் தமிழ் அறிஞர் களுக்கும் அவர்தம் எழுதுகோலுக்கும் விலை யாரும் வைக்க முடியாது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X