பொது செய்தி

இந்தியா

ஓலா, ஊபர் கமிஷனுக்கு வரம்பு நிர்ணயம்

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (2)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ஓலா, ஊபர் போன்ற, 'மொபைல் ஆப்' மூலம் வாடகை கார்களை இயக்கும் பெரிய நிறுவனங்களின் கமிஷனுக்கு, உச்சவரம்பு விதிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது, 20 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும், அந்த நிறுவனங்களின் கமிஷனை, 10 சதவீதமாக குறைக்க, புதிய சட்ட விதிகள் உருவாக்கப்பட உள்ளன.






வாடகை கார்களை பேரம் பேசி அமர்த்தி பயணிக்கும் நிலையை மாற்றியது, பன்னாட்டு நிறுவனமான, ஊபர். அது போலவே, நம் நாட்டின் ஓலா நிறுவனமும், வாடகைக் கார்களை, மொபைல் ஆப் மூலம், வாடிக்கையாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, கட்டணம், துாரம், சென்றடையும் நேரம் போன்றவற்றை தெளிவாக தெரிவித்து, வாடகை கார் தொழிலை மேற்கொள்கிறது.

அந்த நிறுவனங்களின் ஒவ்வொரு பயணத்திற்குமான மொத்த கட்டணத்தில், 20 சதவீதத்திற்கும் மேலான தொகையை, தங்கள் கமிஷனாக, கார் உரிமையாளர்கள் அல்லது டிரைவர்களிடம் இருந்து, ஊபர், ஓலா நிறுவனங்கள் பெற்றுக் கொள்கின்றன. இதனால், அந்த நிறுவனங்களுக்கு அபரிமிதமான வருவாய் கிடைப்பதாக, மத்திய அரசு நம்புகிறது. இந்த வருவாயை குறைத்து, வாடகை கார் ஓட்டுனர்களுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கச் செய்ய, விதிகளை மாற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.





அதன்படி, அந்த நிறுவனங்களின், 20 சதவீத கமிஷன், 10 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது

* மாநில அரசுகளும் விரும்பினால், அந்த நிறுவனங்கள் மீது குறிப்பிட்ட சதவீத வரியை விதிக்கலாம்

* பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தால், தற்போது வசூலிக்கப்படும், பயணக் கட்டணத்தில், 10 சதவீதம் முதல், 50 சதவீதம் வரையிலான தொகையை, அதிகபட்சம், ௧௦௦ ரூபாய்க்கு மிகாமல் வரம்பு விதிக்கப்பட உள்ளது

* கார்களுக்கு தேவை அதிகம் இருக்கும் நேரங்களில், இஷ்டத்திற்கு கட்டணத்தை கூட்டாமல், அடிப்படை கட்டணத்திலிருந்து, அதிகபட்சம் இரண்டு மடங்கு மட்டுமே உயர்த்திக் கொள்ளலாம்

* இந்த அடிப்படைக் கட்டணம், 1 கி.மீ.,க்கு இவ்வளவு ரூபாய் என, மாநில அரசு நிர்ணயிப்பதாக இருக்கலாம் அல்லது அந்த நிறுவனத்தின் கட்டணத்தின்படி இருக்கலாம்

* வாடகை கார்களை இயக்கும் டிரைவர்களை உறுதி செய்ய, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை அவர்களின் முக அடையாளம் அல்லது விரல் ரேகை பதிவை மேற்கொள்ளவும், மத்திய அரசிடம் திட்டம் உள்ளது.

ஓலா நிறுவனத்தின் உரிமையாளர், பவிஷ் அகர்வால், ஊபர் நிறுவனத்தின் தலைவராக இருப்பது, அமெரிக்கரான டிராவிஸ் கலானிக்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
29-நவ-201917:50:10 IST Report Abuse
Gopi நல்லது
Rate this:
Share this comment
Cancel
abc -  ( Posted via: Dinamalar Android App )
29-நவ-201907:15:41 IST Report Abuse
abc already commission is more than 25
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X