பொது செய்தி

தமிழ்நாடு

புதிய பாலம் தற்காலிக சீரமைப்பு

Added : நவ 29, 2019
Advertisement

புவனகிரி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், கீரப்பாளையம் -கண்ணங்குடி சாலை, பூதங்குடி வாய்க்காலில் புதிய பாலம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது

புவனகிரி தாலுகா கீரப்பாளையம் - கண்ணங்குடி சாலையில் பூதங்குடி வாய்க்கால் தரைப்பாலம் பாதிப்படைந்தது. இதனால் எண்ணை நகரம், கரைமேடு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கீரப்பாளையம், புவனகிரி சுற்றுபகுதிக்கு வந்து செல்ல அவதியடைந்தனர்.தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி மற்றும் பொதுமக்கள் கோரிக்கையின் பேரில், கீரப்பாளையம் ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பொது நிதி ரூ.17 லட்சத்து 66 ஆயிரம் செலவில், பழுதடைந்த பாலத்தை இடித்து விட்டு புதியப் பாலம் கட்டும் பணி துவங்கியது.

பணிகளை விரைந்து முடிக்காததால், தற்போது பெய்த மழையில் தண்ணீர் வடியாமல் தேங்கி, தற்காலிக பாலம் பாதிக்கப்பட்டதால், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து மீண்டும் தினமலர் நாளிதழில் சுட்டிக் காட்டப்பட்டது. அதன் எதிரொலியாக தற்போது தற்காலிகமாக பாலம் சரி செய்யப்பட்டுள்ளது.நிரந்தரமாக மண் நிரப்பி பாலத்தின் இரு பக்கமும் தரமான இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X