பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ குணமிக்க 'கோலியஸ்' சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்

Added : நவ 29, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி : மருத்துவ குணமிக்க 'கோலியஸ்' கிழங்கு சாகுபடி செய்வதில் கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோலியஸ் தாவரத்தில் இருந்து பெறப்படும் கூர்க்கன் கிழங்கு இந்திய மருத்துவத் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதய ஆரோக்கியம், ஜீரண பிரச்னை, நோய் எதிர்ப்பு சக்தி, சரும பிரச்னை, சிறுநீரக பாதை தொற்று, சிறுநீர் பை தொற்று, உடல் பருமன், மாதவிடாய் பிரச்னை, புற்று நோய், உயர் ரத்த அழுத்தம், நெஞ்சு வலி, ஆஸ்துமா, வலிப்பு, ரத்த கட்டு, கண்களில் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு இந்த கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.வடிகால் வசதி உள்ள செம்மண், சரளை மண் நிலங்கள் 'கோலியஸ்' சாகுபடிக்கு ஏற்றவவையாகும்.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 'கோலியஸ்' செடி நடவு செய்கின்றனர். 6 மாதங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி, களை நீக்கி, உரமிட்டு வளர்த்தால் 'கோலியஸ்' கிழங்குகளை மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்ய முடியும்.அறுவடைக்குப் பின் 'கோலியஸ்' கிழங்குகளை இயந்திரங்கள் மூலம் துாய்மை செய்து, சிமென்ட் தளங்களில் பரப்பி வெயிலில் உலர வைத்து, அவற்றை பெங்களூரூவில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுப்புகின்றனர். அங்கு சுத்தம் செய்த 'கோலியஸ்' கிழங்குகளிலிருந்து கண் ரத்த அழுத்தத்தை தடுக்க உதவும் மருத்துவ குணமிக்க திரவம் பிரித்தெடுக்கப்படுகிறது.

மேலும் அதிலிருந்து பெறப்படும் வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கவும், உடல் பருமன் குறைக்கப்பயன்படும் பவுடர் போன்ற பொருட்களும் தயார் செய்கின்றனர்.'கோலியஸ்' கிழங்குகள் ஏக்கருக்கு 5 முதல் 7 டன் வரை மகசூல் கிடைக்கிறது. இவற்றை விவசாயிகள் தனியார் நிறுவனங்களிடம் டன் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.அறுவடையின் போது கிடைக்கும் 'கோலியஸ்' செடியின் அடி தண்டுகளும் டன் ஒன்றுக்கு 2,000 ஆயிரம் ரூபாய் வரை விலை கொடுத்து தனியார் நிறுவனங்களே வாங்கிக் கொள்கின்றன.

ஒரு ஏக்கரில் 'கோலியஸ்' பயிரிட 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகிறது. ஆனால், ஏக்கருக்கு சராசரியாக 5 டன் விளைச்சல் கிடைத்தாலும் ஒரு லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது. இதில் நடவு மற்றும் அறுவடை செலவு போக ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது. இதனால் கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகள் 'கோலியஸ்' கிழங்கு பயிர் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X