பொது செய்தி

தமிழ்நாடு

வயல் வெளியில் மருத்துவ கழிவுகள்: விவசாயிகள் அதிர்ச்சி

Added : நவ 29, 2019
Advertisement

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் பைபாஸ் சாலையில் வயல் வெளியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலுார் - சித்துார் சாலையில், திருக்கோவிலுாரில், புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களுக்கு மத்தியில் 5 கி.மீ., துாரத்திற்கு கிராமங்கள் இல்லை. முற்றிலும் விவசாய நிலங்களே உள்ளன. இதனைப்பயன்படுத்தி சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மருத்துவ கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து வயல்வெளியில் கொட்டி விட்டுச் செல்கின்றனர்.இதற்காக விவசாயிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருந்தாலும் அதையும் மீறி மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகிறது.

தற்போது வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், மருத்துவக் கழிவுகள் வேகமாக பரவி தொற்று நோயை ஏற்படுத்துவதுடன் விளை நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மருத்துவக் கழிவுகளை வயல்வெளியில் இருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X