பொது செய்தி

தமிழ்நாடு

சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

Added : நவ 29, 2019
Advertisement

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை புதிய மதகில் கட்டுமானப்பணி முடிந்தும், கரை மற்றும் சாலையை சீர் செய்யாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

வீராணம் ஏரிக்கரை சாலையில் வாழைக்கொல்லை புதிய மதகில் கடந்த ஜனவரி மாதம் ஷட்டர் உள்ளவாங்கி உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியது.அதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக மண்கொட்டி தண்ணீர் வெளியாறாத வகையில் சீரமைத்தனர். பின்னர், ஏரியில் தண்ணீர் வறண்டதால் கடந்த 6 மாதங்களுக்கு முன், புதிய மதகு கட்டுமானப்பணி நடந்தது.இப் பணி முடிவடைந்து மாதக்கணக்கில் ஆனநிலையில், கட்டுமானப்பணிக்காக உடைக்கப்பட்ட கரை, மற்றும் சாலையை சீரமைக்காமல் விட்டு விட்டனர்.இது குறித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன், தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. மாவட்டங்களில் நடந்து வரும் கட்டுமானப்பணி, ஏரிகளை கலெக்டர் அன்புச்செல்வன் பார்வையிட்டு, விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார்.ஆனால் மதகு பணி முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் சாலையை சீரமைக்காமல் விட்டுள்ளனர். இதனால் இவ்வழியாக பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தடுமாறி செல்கின்றன.சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைப்பு பணியை மேற் கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X