மட்டிகை கிராமத்தில் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

Added : நவ 29, 2019
Advertisement

உளுந்துார்பேட்டை : மட்டிகை கிராமத்தில் தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் அடுத்த மட்டிகை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமென்ட் சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லை.இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மழைநீருடன் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் கழிவுநீர் கால்வாயும், சாலை வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X